உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் சுவரை உடைத்து உண்டியல் கொள்ளை

கோவில் சுவரை உடைத்து உண்டியல் கொள்ளை

சென்னை : அம்மன் கோவில் சுவரை உடைத்து, கொள்ளையடித்த மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர். சென்னை ஏழுகிணறு கொண்டித்தோப்பு குப்பையர் தெருவில், இலந்தை அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில், அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள், கோவில் பின்பக்கச் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே சென்று, அம்மன் சிலையில் இருந்து, வெள்ளிக் கவசம், செம்பு மற்றும் இரண்டு உண்டியல்களை கொள்ளையடித்துள்ளனர். அதன் மதிப்பு ஒரு லட்ச ரூபாய். கோவில் வாட்ச்மேன் ஜெயக்குமார் கொடுத்த புகாரின்படி, ஏழுகிணறு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், கொள்ளையடித்த நபர்களை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை