உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

சென்னை : மீஞ்சூர் - அத்திப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெறுவதால், ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், மீஞ்சூர் - அத்திப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் பாதை பராமரிப்பு பணி, அக்.,3 மற்றும், 8ம் தேதி காலை, 10.10 மணி முதல், பகல், 2.40 மணி வரை நடக்கிறது. இதையடுத்து, இவ்வழியாக செல்லும் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ்(12712), 40 நிமிடம் தாமதமாக புறப்படும். சூலூர்பேட்டையில் இருந்து காலை, 11.10 மணிக்கு சென்ட்ரலுக்கு புறப்படும் மின்சார ரயில், சென்ட்ரலில் காலை, 9.55 மணிக்கு சூலூர்பேட்டை புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிட்ரகுண்டா -சென்னை சென்ட்ரல் பாசஞ்சர் ரயில், கும்மிடிப்பூண்டி வரை மட்டும் இயங்கும்.சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, காலை 9.22, 10.25, 11.35, 12.10, பகல் 1.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், எண்ணூர் வரை இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரலுக்கு, காலை 10.50, 11.20, பகல் 1, 1.25, 3.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், எண்ணூரில் இருந்து புறப்படும்.சென்ட்ரலில் இருந்து பகல், 12.40 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் எண்ணூர் வரை இயக்கப்படும். சூலூர்பேட்டையில் இருந்து, பகல், 1.15 மணிக்கு சென்ட்ரலுக்கு புறப்படும் மின்சார ரயில், எண்ணூரில் இருந்து புறப்படும்.இத்தகவலை தெற்கு ரயில்வேதெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை