உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சர்வதேச ரேட்டிங் செஸ் சென்னை வீரர் முதலிடம்

சர்வதேச ரேட்டிங் செஸ் சென்னை வீரர் முதலிடம்

சென்னை, சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டியில், 7.5 புள்ளிகள் பெற்று, சென்னை வீரர் பிரசன்னா முதலிடத்தை பிடித்து, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார். நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லுாரி மற்றும் மவுன்ட் செஸ் அகாடமி இணைந்து, எம்.எஸ்.வெங்கடராமன் நினைவு கோப்பைக்கான சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டியை, செம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடத்தின. போட்டிகள், கடந்த 27ல் துவங்கி, 30ம் தேதி நிறைவடைந்தது. போட்டியில், சர்வதேச மாஸ்டர்கள், மூன்று பிடே மாஸ்டர்கள் உட்பட 442 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். மொத்தம் எட்டு சுற்றுகள் முடிவில், 7.5 புள்ளிகள் பெற்ற சென்னையை சேர்ந்த பிரசன்னா முதலிடத்தை பிடித்து, கோப்பையை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து, ஏழு புள்ளிகள் பெற்று, சென்னையை சேர்ந்த ஐ.சி.எப்., வீரர் பிரவீன் குமார், அஜ்ஜேஷ், வினோத்குமார், பரத், கோவை அவினாஷ் ரமேஷ் ஆகியோர் இரண்டாமிடத்தை பகிர்ந்தனர். அடுத்து, சென்னையை சேர்ந்த சைலேஷ், சிவன் ரோஷன், ஜெயந்த் வெங்கடேஷ், அபிநந்தன் ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை