சென்னை பல்கலை தொலைதுார கல்வி தேர்வு ஒத்திவைப்பு
சென்னை:சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி நிறுவன பட்டப்படிப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, சென்னை பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி நிறுவனத்தில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு, நாளை நடைபெறுவதாக இருந்தது.அன்றைய தினம், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு நடக்கவுள்ளதால், பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வின் மறு தேதி குறித்து, http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.