உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் இறப்பு

நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் இறப்பு

ஏலகிரி: நீச்சல் குளத்தில் மூழ்கி, சென்னையைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் உயிரிழந்தார். திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலை கொட்டையூரில் ஒரு ரிசார்ட்டுக்கு சென்னையைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் எழில்ராஜா, 36, என்பவர், நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு வந்து தங்கினார். ரிசார்ட் நீச்சல் குளத்தில், நண்பர்களுடன் நள்ளிரவில் மது அருந்தி விட்டு இறங்கியவர் நீரில் மூழ்கினார். நண்பர்கள் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் இறந்தது தெரிந்தது. எழில்ராஜாவுக்கு மனைவி ஸ்ரீவிதா, 32, மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை