உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழையால் ஒத்திவைக்கப்பட்ட செஸ் போட்டி: 22ல் துவக்கம்

மழையால் ஒத்திவைக்கப்பட்ட செஸ் போட்டி: 22ல் துவக்கம்

சென்னை, புயல் மழையால் ஒத்திவைக்கப்பட்ட, சிறுவர்களுக்கான மாநில செஸ் போட்டி, வரும், 22ம் தேதி மீண்டும் முகப்பேரில் நடக்கிறது.'ஏ - மேக்ஸ்' அகாடமி சார்பில், 5வது மாநில அளவிலான செஸ் போட்டி, முகபேரில் உள்ள டெக்லத்தான் மைதானத்தில், கடந்த 30ம் தேதி நடத்தப்படுவதாக இருந்தது.'பெஞ்சல்' புயல் மழை காரணமாக, தேதி அறிவிப்பின்றி தற்காலிகமாக ஒத்திவைத்த போட்டி, மீண்டும் வரும், 22ம் தேதி அதே இடத்தில் நடத்தப்பட உள்ளது.இதில், 8, 10, 12, 15 மற்றும் 25 வயதுக்கு உட்பட இருபாலருக்கும் தனித்தனியாக நடக்க உள்ளது.'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடக்கிறது.போட்டியில் பங்கேற்க இதுவரை, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 400க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் பதிவு செய்துள்ளனர். போட்டியில், வெற்றி பெறுவோருக்கு கோப்பைகளும், சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ