குளத்தில் மூழ்கி குழந்தைகள் பலி முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
சென்னை: அயனம்பாக்கத்தில், குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி மற்றும் அவரது மனைவி வசந்தா ஆகியோர், தங்கள் குழந்தைகள் ரியாஸ், 5, ரிஸ்வான், 3, ஆகியோரை, வீட்டில் விட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளனர். குழந்தைகள் இருவரும், அருகில் உள்ள பொன்னியம்மன் கோவில் குளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளனர். இந்த துயரகரமான செய்தி கேட்டு, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.