உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் கோப்பை மாநில போட்டி அக்., 2ல் சென்னையில் துவக்கம்

முதல்வர் கோப்பை மாநில போட்டி அக்., 2ல் சென்னையில் துவக்கம்

சென்னை;சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அக்., 2ல் துவங்கும் முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், மாவட்ட அளவிலான போட்டிகள், அந்தந்த மாவட்டங்களில் கடந்த ஆகஸ்ட மாதம் முழுதும் நடந்தன. தொடர்ந்து, மாநில அளவிலான போட்டிகள், அக்., 2ல் துவங்கி, 14ம் தேதி வரை, சென்னை, செங்கல்பட்டு, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடக்கின்றன. அதற்கான பட்டியலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை