உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேலை பார்த்த சிறுவர்களை தாக்கி ஜிபேயில் பணம் பறிப்பு

வேலை பார்த்த சிறுவர்களை தாக்கி ஜிபேயில் பணம் பறிப்பு

சென்னை:செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தன் நண்பர்கள் மூவருடன் கோடம்பாக்கத்தில் உள்ள மேத்யூ கார்மென்ஸ் நிறுவனத்தில், 7 ம் தேதி பணிக்கு சேர்ந்தார்.கடந்த, 9ம் தேதி இரவு, கோடம்பாக்கத்தில் தங்கும் விடுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நிறுவன கண்காணிப்பாளர் கவியரசன், ஷேக் அலாவுதீன் மற்றும் தீபா ஆகிய மூவரும் அங்கு வந்தனர். சிறுவர்கள் பணம் கையாடல் செய்ததாக கூறி, பிவிசி பைப் பயன்படுத்தி, நான்கு சிறுவர்களையும் தாக்கினர். பின் அவர்களை மிரட்டி 'ஜிபே'யில், 10,500 ரூபாயை பறித்துச் சென்றனர். இதில் காயமடைந்த சிறுவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.பின் இதுகுறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட கவியரசன், 34 மற்றும் ஷேக் அலாவுதீன், 29 ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 10,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள தீபாவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை