உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.6.50 லட்சம் மோசடி வழக்கு சிந்தாதிரிப்பேட்டை நபர் கைது

ரூ.6.50 லட்சம் மோசடி வழக்கு சிந்தாதிரிப்பேட்டை நபர் கைது

எம்.கே.பி.நகர்: நகர்ப்புற வாரிய குடியிருப்புகள் வாங்கி தருவதாக கூறி, 6.50 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வேளாண்மை நலத்துறை ஊழியரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி, கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் அம்பத்ராஜ், 31; மாநகராட்சி ஒப்பந்த ஊழியர். இவருக்கு, வேளாண்மை உழவர் நலத்துறையில் பணிபுரியும் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சரவணன், 53, என்பவர் அறிமுகமாகி உள்ளார். சரவணன், அம்பத்ராஜுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வீடுகள் வாங்கி தருவதாக, ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய அம்பத்ராஜ், கடந்த 2023 மார்ச் 6ம் தேதி, தனக்கு தெரிந்த சசிகலா, சதீஷ், ரேகா, புவனேஸ்வரி ஆகியோரிடம் இருந்து, 6.50 லட்சம் ரூபாய் பெற்று, சரவணனிடம் கொடுத்துள்ளார். இரண்டரை ஆண்டுகளாகியும் சரவணன், வீடு வாங்கி கொடுக்காததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து வடக்கு மண்டல கூடுதல் கமிஷனரிடம் அம்பத்ராஜ் புகார் அளித்தார். அவரது உத்தரவின்படி கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட, வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலக உதவியாளராக பணிபுரியும் சரவணனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ