உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனை பட்டா கேட்டு சூளை மக்கள் மனு

மனை பட்டா கேட்டு சூளை மக்கள் மனு

சென்னை: சூளை தட்டாங்குளம் பகுதியில், ஐந்து தலைமுறைகளாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனக்கோரி, அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம், பகுதிமக்கள் சார்பில், பாரத் இந்து முன்னணி மாநில தலைவர் ஆர்.டி.பிரபு அளித்த மனு விபரம்: சூளை, தட்டாங்குளத்தில், சூளை அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இப்பகுதியில் உள்ளவர்கள் குழு அமைத்து, கோவில் திருப்பணிகளை செய்து வந்தனர். இதனால் கோவில் நிர்வாகம், இவர்கள் குடியிருப்பு பகுதியை மாத வாடகைக்கு மாற்றியதோடு, தட்டாங்குளம் பகுதி கோவிலுக்கு சொந்தம் என உரிமை கோரியது. ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கிடைத்த தகவலில், தட்டாங்குளம் பகுதி கோவிலுக்கு சொந்தமில்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே, இங்கு வசிக்கும் 243 வீடுகளும், சேத்துப்பட்டு, அயனாவரம், வில்லிவாக்கம், அண்ணா சாலை ஆகிய பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும், 556 வீடுகளுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை