உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப்., வீரர் உயிரிழப்பு

சென்னை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப்., வீரர் உயிரிழப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில், சி.ஐ.எஸ்.எப்., என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் நேற்று திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.ஹரியானா மாநிலம் சண்டிகரை சேர்ந்தவர் ரோதாஸ் குமார் 52. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர். இவர், நெய்வேலியில் உள்ள, என்.எல்.சி.,யில் பாதுகாப்பு பணியில் இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால், விடுப்பில் சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். ஏர் இந்தியா விமானத்தில், சென்னையில் இருந்து டில்லி வழியாக ஹரியானா மாநிலம் செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்தார்.சென்னை உள்நாட்டு விமான நிலையம் நான்காவது முனையத்தில், 'போர்டிங் பாஸ்' வாங்கி விட்டு, பாதுகாப்பு சோதனை பகுதிக்கு செல்ல முயன்ற ரோதாஸ் குமார், திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், சக பயணியர், ரோதாஸ்குமாரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ரோதாஸ் குமார் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். பின்னர், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்ப, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், ஏற்பாடு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி