கால்பந்தில் சிட்டி போலீஸ் அணி வெற்றி
சென்னை, சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் போட்டி, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில் நடக்கிறது.நேற்று நடந்த போட்டியில், சென்னை சிட்டி போலீஸ் அணி, நேதாஜி எப்.சி., அணியை எதிர்கொண்டது.போட்டி துவங்கிய 16வது நிமிடத்தில், சிட்டி போலீஸ் அணியின் ராகுல் தன் அணிக்காக, முதல் கோல் அடித்தார். தொடர்ந்து 19வது நிமிடத்தில், சிட்டி போலீஸ் அணியின் ராகுல், மீண்டும்ஒரு கோல் அடிக்க, போட்டி முடிவில் 2 - 0 என்ற கோல் கணக்கில், சென்னை சிட்டி போலீஸ் அணி, நேதாஜி எப்.சி., அணியை வென்றது.சென்னை சிட்டி போலீஸ் அணிக்காக இரண்டு கோல் அடித்த ராகுல், ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.