உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்லுாரி மாணவர்களிடம் கோகைன் பறிமுதல்

கல்லுாரி மாணவர்களிடம் கோகைன் பறிமுதல்

சூளைமேடு சூளைமேடில், 51 கிராம் கோகைன் மற்றும் கஞ்சாவை விற்ற, கல்லுாரி மாணவர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.சூளைமேடு பகுதியில், கல்லுாரி மாணவர் ஒருவர் போதை பொருள் விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரித்து, சூளைமேடைச் சேர்ந்த, பிரபல கல்லுாரி மாணவர்களான நளீன் பாசித், 20, அன் ரியன் சோனிக், 19, மிக்கன், 20, அயான்கான், 24, மற்றும் சவுகார்பேட்டையைச் சேர்ந்த மாயூர், 35, ஆகியோரை கைது செய்தனர்.அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் இருந்து, 51 கிராம் கோகைன், 850 கிராம் கஞ்சா, மூன்று கிராம் ஓ.ஜி., கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி வந்து, சக கல்லுாரி மாணவர்களுக்கு விற்றது தெரியவந்தது.இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை குறித்து, சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை