உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாராய குளத்தில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி

சாராய குளத்தில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி

செம்மஞ்சேரி:தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பொன்செய்யந்தன், 20. செம்மஞ்சேரி, மெஜஸ்டிக் தெருவில் தங்கி, ஜோசப் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று, நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு, அறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, சாலை பள்ளத்தில் தேங்கிய சேர், இவர் மீது தெறித்தது. இதையடுத்து, பாண்டிச்சேரி பாட்டை சாலையில் உள்ள, சாராய குளத்தில் கழுவ சென்றார்.குளப்படியில் கால் வைத்தபோது, பாசி வழுக்கி குளத்தில் விழுந்தார். நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால், அவரை காப்பாற்ற முடியாமல், சத்தம் போட்டு உதவிக்கு மக்களை கூப்பிட்டனர். சற்று தொலைவில் உள்ளவர்கள், ஓடி வருவதற்குள், பொன்செய்யந்தன் நீரில் மூழ்கி பலியானார். சிறுசேரி தீயணைப்பு நிலைய வீரர்கள், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி