மேலும் செய்திகள்
நாராயணசாமி நாயுடுவுக்கு விவசாயிகள் நினைவஞ்சலி
22-Dec-2024
சென்னை, தமிழகத்தில், 2004ம் ஆண்டு சுனாமி பேரலையால், 8,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஒவ்வொரு ஆண்டும் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், கடற்கரைகளில் மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் பால் ஊற்றியும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, 20ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று சென்னை மெரினா லுாப் சாலையில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில், பொதுமக்களுடன் மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் பால் ஊற்றியும் கவர்னர் ரவி அஞ்சலி செலுத்தினார். திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் தலைமையில் அமைச்சர் நாசர், அமைப்பு செயலர் பாரதி, கவுன்சிலர் சொக்கலிங்கம் உட்பட 1,000 க்கும் மேற்பட்டோர், பேரணியாக சென்று, கே.வி.கே.குப்பம் கடற்கரையில், பால் ஊற்றி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். திருவொற்றியூர் மேற்கு தி.மு.க., பகுதி செயலர் அருள்தாசன் தலைமையில் பாரதியார் நகரில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், மண்டலக் குழு தலைவர் தனியரசுஉள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர். சமத்துவ மக்கள் கழக தலைவரும், பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவரான நாராயணன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், ராமகிருஷ்ணா நகர் கடற்கரைக்கு பேரணியாக சென்று கடலில் அஞ்சலி செலுத்தினர். திருவொற்றியூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன், கவுன்சிலர் கார்த்திக் தலைமையில், 500க்கும் மேற்பட்ட பெண்கள், குப்பம் பகுதியில் அஞ்சலி செலுத்தினர்.அ.தி.மு.க., வட சென்னை வடகிழக்கு மாவட்ட செயலர் ராஜேஷ் தலைமையிலான 200க்கும் மேற்பட்டோர் காசிமேடு கடற்கரையில் வடிவமைக்கப்பட்டிருந்த மணல் சிற்பத்திற்கு மலர் துாவினர். அதேபோல், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினார். தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ.,க்கள் எபினேசர், ஐடிரீம் மூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலர் இளைய அருணா உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டோரும், அனைத்து மீனவர் சங்கம் சார்பில், நாஞ்சில் ரவி மற்றும் சென்னை விசைப்படகு மரம் விடும் தொழிலாளர் நல சங்கம், பா.ஜ., அ.ம.மு.க., காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
22-Dec-2024