உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓய்வு பெற்றவர்களுக்கு கமிஷனர் பாராட்டு

ஓய்வு பெற்றவர்களுக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கூடுதல் காவல் துணை கமிஷனர் ஜெயசிங், உதவி கமிஷனர் அசோக் குமார் உள்ளிட்ட 30 காவல் அதிகாரிகளின் பணி நிறைவு விழா நேற்று நடந்தது.அவர்களின் பணிகளை நினைவுகூர்ந்து, பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி, இணை கமிஷனர் கயல்விழி, துணை கமிஷனர்கள் மணிவண்ணன், சீனிவாசன் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்