புகார் பெட்டி மதுக்கூடமாக மாறிய சுடுகாடு
மதுக்கூடமாக மாறிய சுடுகாடு
ஆவடி மாநகராட்சி, 12வது வார்டு, கோவில்பதாகை, கலைஞர் நகர் 18வது தெருவில், மாநகராட்சி சுடுகாடு உள்ளது. போதுமான பராமரிப்பு இல்லாததால், எரிமேடை, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, கேட் துருப்பிடித்து, சுடுகாட்டில் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால், இறுதி சடங்கு செய்யும் பகுதிவாசிகள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இரவு வேளைகளில், சுடுகாட்டை சமூக விரோதிகள் திறந்தவெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.சுடுகாட்டை சீரமைத்து, பராமரிக்க, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கருணாகரன், கோவில்பதாகை.