உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பெண்ணை கடித்த தெருநாய் சோறு போட்டவர் மீது புகார்

 பெண்ணை கடித்த தெருநாய் சோறு போட்டவர் மீது புகார்

சென்னை: திருவல்லிக்கேணியில், தெருவில் நடந்து சென்ற திரையரங்கு பெண் துாய்மை ஊழியரை, தெருநாய் கடித்து குதறியது. திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் பத்மபிரியா, 37. இவர், ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில், துாய்மை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று, அலங்கார் தெரு வழியாக நடந்து சென்றபோது, சந்திரகுமார் என்பவர் வளர்த்து வந்த தெரு நாய், அவரது வலது காலை கடித்து குதறியது. அதில் காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரையடுத்து, சந்திரகுமாரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை