உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாயை அடித்து கொன்ற ராணுவ வீரர் மீது புகார்

நாயை அடித்து கொன்ற ராணுவ வீரர் மீது புகார்

பல்லாவரம் பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பணியாற்றும் ராணுவ அதிகாரிகளுக்கான குடியிருப்பு, பல்லாவரம் வெட்டர் லைன் பகுதியில் உள்ளது.இந்த குடியிருப்பில் சுற்றித் திரிந்த நாய் ஒன்றை, ராணுவ வீரர் ஒருவர், கட்டையால் அடித்து கொன்றதாக, பல்லாவரம் காவல் நிலையத்தில், புளூ கிராஸ் அமைப்பு, நேற்று முன்தினம் புகார் அளித்தது.போலீசார் நடத்திய விசாரணையில், வெட்டர் லைனில் சுற்றித் திரிந்த வெறி பிடித்த நாய் ஒன்று, அங்குள்ளவர்களை கடிக்க பாய்ந்ததால், ஹவில்தாராக பணிபுரியும் பைடி ராஜு, 27, என்பவர், தலையில் கட்டையால் அடித்து கொன்றுள்ளார்.பின், அந்த நாயின் உடலை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, இச்சம்பவம் குறித்து, ராணுவ அதிகாரிகளுக்கு, பல்லாவரம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், பைடி ராஜுவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்படும் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ