மேலும் செய்திகள்
அவசர கால சிகிச்சைக்கு 'காவேரி கேர்' செயலி
24-Dec-2025
சென்னை: சிக்கலான இதய துடிப்பு பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில், '3டி' தொழில்நுட்பத்தை, வடபழனி காவேரி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில், 3டி தொழில்நுட்ப சாதன மையத்தை, நடிகர் சரத்குமார், மருத்துவமனை குழும இணை நிறுவனர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர், நேற்று திறந்து வைத்தனர். இதுகுறித்து, டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், மிகவும் சவாலான உடல்நல சிக்கல்களுக்கு, அதிக பாதுகாப்பும் தீர்வும் தருகிறது. குறிப்பாக, இதயத்தின் செயல்பாடுகளை, '3டி' வரைபடங்களாக உருவாக்க டாக்டர்களுக்கு உதவுகிறது. இதன் வாயிலாக அசாதாரண இதய துடிப்புகள் உருவாகும் இடத்தை, துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். தமிழகத்தில் முதன் முறையாக நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான சிகிச்சையை வழங்குவதில், நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
24-Dec-2025