உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  முறையாக வாகனங்கள் நிறுத்த கான்கிரீட் ஸ்லீப்பர் கல் தடுப்பு

 முறையாக வாகனங்கள் நிறுத்த கான்கிரீட் ஸ்லீப்பர் கல் தடுப்பு

ஆவடி: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஆவடி ரயில் நிலைய சாலையில் வாகனங்களை, முறையாக நிறுத்துவதற்கு ஏதுவாக, 'கான்கிரீட் ஸ்லீப்பர்' கல் போடப்பட்டது. ஆவடி ரயில் நிலையத்தை தினமும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். ரயிலில் பயணிப்போர் வசதிக்காக, ஆவடி ரயில் நிலையம் பின்புறம், திருமலைராஜபுரம் பகுதியில், ஏழு வாகன நிறுத்தங்கள் உள்ளன. இருப்பினும் பொதுமக்கள், வாகனங்களை 'பார்க்கிங்' பகுதியில் நிறுத்தாமல், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தி வந்தனர். இதனால், சாலை பாதியாக சுருங்கி, அவசர ஊர்திகள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிலர், ரயில்வே நடைமேடைக்கு செல்லும் பாதையில், வாகனங்களை நிறுத்தி சென்றால் பயணியர் அவதி அடைந்தனர். மேலும், அப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் அடிக்கடி திருடு போனது. இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, ஒரு மாதத்திற்கு முன் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், சங்கிலியால் பூட்டப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. அதை பொதுமக்கள் வரவேற்ற நிலையில், வாகனங்கள் நிறுத்துவது தொடர்ந்தது. இதையடுத்து, அங்கு வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருக்க, ஆவடி ஆர்.பி.எப்., போலீசாரால் 'கான்கிரீட் ஸ்லீப்பர்' கல் போடப்பட்டுள்ளது. இதை அனைவரும் வரவேற்றுள்ளனர். இதையும் மீறி வாகனங்களை நிறுத்தினால், ஆவடி போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை