உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்பத்தூரில் காங்கிரசார் துண்டு பிரசுரங்களை வழங்கி பேரணி

அம்பத்தூரில் காங்கிரசார் துண்டு பிரசுரங்களை வழங்கி பேரணி

அம்பத்தூர்,அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே, அம்பத்தூர் வடக்கு பகுதி காங்கிரஸ் சார்பில், அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் என்கிற பெயரில் பிரச்சார பேரணி நடந்தது. இதில், மாநில துணைத்தலைவர் சுதா நாஞ்சில் பிரசாத், மாநில பொதுச்செயலர் பாஸ்கர், ஏ.ஜி சிதம்பரம் உட்பட, 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள், அரசியல் சாசனம் குறித்த வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, அம்பத்தூர் மார்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கியபடி, அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து, அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் வரை ஒரு கி.மீ., தூரத்துக்கு பேரணியாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி