உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி கமிஷனர் நேரடி துாய்மை பணி

மாநகராட்சி கமிஷனர் நேரடி துாய்மை பணி

சென்னை, சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்தில் புனித மேரீஸ் கிறிஸ்தவ கல்லறையில், புதர்மண்டி கிடைப்பதாக பெண் ஒருவர், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தார்.அதைதொடர்ந்து, கமிஷனர் நேரடியாக அப்பகுதியில் துாய்மைப்படுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டார். அதேபோல், கஸ்துாரி பாய் நகர் ரயில்வே வாகன நிறுத்தும் இடங்களிலும், தீவிர துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.இதுகுறித்து, கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சென்னையில் பல்வேறு இடங்களில் துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பொதுமக்களும், துாய்மை பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக, குப்பையை முறையாக தரம் பிரித்து வழங்குவதுடன், பொது இடங்களில் பிளாஸ்டிக், கண்ணாடி, குப்பை கொட்டுதல், கட்டுமான கழிவு கொட்டுதல் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.தொண்டு நிறுவனங்கள் துாய்மை பணிகளில் ஈடுபட தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். அவர்கள், மண்டல அலுவலர்கள் வாயிலாக தங்களது பங்களிப்பை அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை