மேலும் செய்திகள்
பைக் மீது பஸ் மோதி வாலிபர்கள் இருவர் பலி
30-Sep-2025
ஆலந்துார்:பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், படுகாயமடைந்த வேன் ஓட்டுநர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம், பாபநாசம், தேவன்குடியை சேர்ந்தவர் சரவணன், 29. இவர், ஆலந்துாரில் தங்கி, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில், வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 6ம் தேதி, அலுவலகத்தில் இருந்து, 'பஜாஜ் டிஸ்கவர்' இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கத்திப்பாரா மேம்பாலம் அருகே சென்றபோது, எதிர் திசையில் வேகமாக வந்த ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த அஸ்வின்குமார், 22, என்பவர்w ஓட்டி வந்த 'யமஹா' பைக், சரவணன் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு, இருவரும் பலத்த காயமடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த சரவணன், கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். கை, தோள்பட்டையில் பலத்த காயமடைந்த அஸ்வின்குமார், பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Sep-2025