சர்ச் கட்டடத்தை இடிக்கும் விவகாரம்: அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
குரோம்பேட்டை: தாம்பரம் மாநகராட்சி, அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள சர்ச், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக, தனி நபர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சர்ச்சை இடித்து அப்புறப்படுத்த, 2023, மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதற்கிடையே, பல்வேறு காரணங்களால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, 2025, டிச., 5க்குள் சர்ச் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில், டிச., 8ம் தேதி சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சர்ச் இடித்து அகற்ற, போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் மற்றும் பணியாளர்களுடன், மாநகராட்சி அதிகாரிகள் கடந்த, 6ம் தேதி சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், சர்ச் கட்டடம் இடிப்பது தற்காலிமாக நிறுத்தப்பட்டது.இந்த நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர், நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த லட்சுமி நாராயணம் மற்றும் ரமேஷ் ஆகிய இரு நீதிபதிள் அடங்கிய அமர்வு, 'நீ திமன்ற உத்தரவை செயல்படுத்தாமல், பொதுமக்களை சர்ச் வளாகத்திற்குள் அனுமதித்து, வேடிக்கை பார்த்து கொண்டி ருந்தீர்களா? 'கட்டடத்தை இடிக்க தடையாக இருந்தவர்கள் மீது காவல் துறை மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எத்தனை பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 'இரண்டு ஆண்டுகளாக சர்ச் கட்டடத்தின் மீது மேல் நடவடிக்கை ஏதும் எடுக்காததால், தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என தெரியாதா உங்களுக்கு?' என, கடுமையாக கேள்வி எழுப்பியது. மேலு ம், சர்ச் தரப்பினர் தாங்களே கட்டடத்தை இடித்துக்கொள்ள, டிச., 15ம் தேதிக்குள் உரிய மனு தாக்கல் சமர்ப்பிக்கும்பட்சத்தில், 2026, ஜன., 7ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்ப டும். இல்லாதபட்சத்தில் அதிகாரிகளே சர்ச் கட்டடத்தை இடித்து அகற்றலாம் என, அதிகாரிகளுக்கு அமர்வு உத்தரவிட்டது.