உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை விபத்தில் மாடு பலி

சாலை விபத்தில் மாடு பலி

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை, நாராயணபுரம் பகுதியில், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மாடுகள் வளர்த்து வருகின்றனர். அதில், சிலர் மாடுகளை, சாலையில் கட்டவிழ்த்து விடுகின்றனர்.அவை இரவு நேரங்களில் சாலையில் உலவுவதால், அடிக்கடி அப்பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு, சாலையில் படுத்திருந்த மாட்டின் மீது, அடையாளம் தெரியாத கனரக வாகனம் ஏறி இறங்கியதில், வயிறு கிழிந்து குடல் வெளிவந்த நிலையில் இறந்து கிடந்தது.இறந்து கிடந்த மாடு குறித்து யாரும் உரிமை கோராததால், மாநகராட்சி அதிகாரிகள் அதை அகற்றி அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை