உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி ஆவடி:ஆவடி - இந்து கல்லுாரி ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில், 45மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய ஆவடி ரயில்வே போலீசார் விசாரணையில், தண்டவாளத்தை கடந்தபோது, சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது.அவர் யார் என்பது குறித்து, போலீசார்விசாரிக்கின்றனர்.கொலை வழக்கில் 9 பேர் கைது அடையாறு: கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் குணசேகரன், 45. நேற்று முன்தினம், அடையாறு, இந்திரா நகரில், ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.அடையாறு போலீசார் விசாரணையில், கவுதம் என்ற வழக்கறிஞரை, குணசேகரன் வெட்டி கொலை செய்தார். அதற்கு பழி வாங்க, குணசேகரன் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட தனுஷ், 25, உட்பட 9 பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.கார் மோதி மாணவன் பலி பூந்தமல்லி: ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் புனித், 21. தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில், 'டி.வி.எஸ்., ஜூபிட்டர்' ஸ்கூட்டரில் நேற்று மாலை சென்றார். அப்போது அந்த வழியே சென்ற கார் மோதியதில் பலத்த காயமடைந்த புனித், சம்பவ இடத்திலேயே பலியானார்.ஆவடி போக்குவரத்துபுலனாய்வு பிரிவு போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை