உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

'போக்சோ' கைதி தப்பி ஓட்டம் சென்னை: அம்பத்துாரைச் சேர்ந்த ராஜா, 20, ஒரு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், கடந்த மாதம் 15ல் கைதானார். தன் கிட்னியில் கல் இருப்பதால், வயிறு வலிப்பதாக புழல் சிறை போலீசாரிடம், நேற்று மதியம் ராஜா தெரிவித்துள்ளார். ராஜா உட்பட இரண்டு விசாரணை கைதிகளை, ஐந்து ஆயுதப்படை காவலர்கள், போலீஸ் வாகனத்தில், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு, நேற்று அழைத்துச் சென்றனர். அப்போது, காவலர்களின் கவனத்தை திசை திருப்பிய ராஜா, மருத்துவமனையில் இருந்து தப்பினார். மற்ற இரு கைதிகள் புழலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பீஹார் வாலிபர்கள் மோதல்: 4 பேர் 'அட்மிட்' கொரட்டூர்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் மன்ஜித், 21, கொரட்டூர் பகுதியில் தங்கியுள்ளார். இவரது வீட்டின் முன், நேற்று அதிகாலை அதே மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் மது அருந்தினர். இதை தட்டி கேட்டபோது, நால்வரும் தாக்கியதில் மணிஷ் மன்ஜித் தலையில் காயம் ஏற்பட்டது. பதிலுக்கு அவர் கத்தியால் தாக்கியதில் மூன்று பேரின் கைகளில் வெட்டு விழுந்தது. கொரட்டூர் போலீசார், நான்கு பேரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 'மாஜி' காதலியை கொல்ல முயன்றவர் கைது ஓட்டேரி: ஓட்டேரியை சேர்ந்த 21 வயது பெண்ணும், அவரது நண்பர் புனிதன் என்பவரும், கடந்த 14ம் தேதி இரவு, ஜமாலியா சாலையில் பேசி கொண்டிருந்தனர். அங்கு வந்த நான்கு பேர், அப்பெண்ணை கத்தியால் வெட்ட முயன்றபோது புனிதன் காப்பாற்றினார். ஓட்டேரி போலீசார் விசாரணைணயில் அப்பெண்ணை தாக்க முயன்றது முன்னாள் காதலன் இமானுவேல், 22, மற்றும் அவரது நண்பர்கள் மூவர் என்பது தெரிய வந்தது. போலீசார், நால்வரையும் கைது செய்தனர். தனியார் பள்ளி வாகனங்கள் மூன்று பறிமுதல் குன்றத்துார்: தனியார் பள்ளிகளின் வாகனங்களை, குன்றத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று சோதனை செய்தனர். இதில் மூன்று வேன்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்யாமலும், உரிய ஆவணங்களின்றியும் மாணவர்களை ஏற்றிச்சென்றது தெரியவந்தது. இதை அடுத்து மூன்று வேன்களையும் பறிமுதல் செய்து, தலா 36,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மனைவி கண்முன் கணவரை தாக்கி வாலிபர்கள் ஓட்டேரி: ஓட்டேரி நார்த் டவுன் பகுதியைச் சேர்ந்த ஆசிப் ரகுமான், 45, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, மனைவியுடன் காரில் பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர் ஆசிப் ரகுமானின் காரில் இடித்து, தகராறு செய்தனர். மனைவியின் கண்முன் ஆசிப் ரகுமானை சரமாரியாக தாக்கினர். பலத்த காயமடைந்த அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புளியந்தோப்பு போலீசார், இப்ராஹிம், 26, விஜய், 24, ஆகிய இருவரை கைது செய்தனர். ரயில் பயணியிடம் போன் பறித்தவர் கைது சென்னை: எண்ணுார், நேரு நகரைச் சேர்ந்தவர் அபிமன்யு 26. வியாசர்பாடி போக்குவரத்து பணிமனை ஊழியர். கடந்த 13ம் தேதி இரவு, மின்சார ரயிலின் படி ஓரம் நின்று, அபிமன்யு பயணித்தார். அப்போது, கொருக்குப்பேட்டை -- பேசின்பாலம் அருகே தண்டவாளத்தில் நின்றிருந்த ஒருவர், குச்சியால் அபிமன்யுவை தாக்கி போனை பறித்தார். கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து, அஜித், 24, என்பவரை கைது செய்தனர். தனியார் பள்ளி 3 வாகனங்கள் பறிமுதல் குன்றத்துார்: தனியார் பள்ளிகளின் வாகனங்களை, குன்றத்துார் வட்டர போக்குவரத்து அலுவலர்கள் நேற்று சோதனை செய்தனர். இதில் மூன்று வேன்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்யாமலும், உரிய ஆவணங்களின்றியும் மாணவர்களை ஏற்றிச்சென்றது தெரியவந்தது. இதை அடுத்து மூன்று வேன்களையும் பறிமுதல் செய்து, தலா 36,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஜூலை 16, 2026 05:16

21 வயதுப் பெண்ணுக்கு பல முன்னாள் காதலர்கள், பல இந்நாள் காதலர்கள். ஈர வெங்காயத்தின் புதுமைப் பெண்ணுக்கு ஒரு ராயல் சல்யூட்.


Mani . V
ஜூலை 16, 2026 05:14

இல்ல புரியல. தனக்கு கிட்னியில் கல் இருக்கிறது என்று ஒரு புள்ளிங்கோ சொல்லுமாம். அதை மக்களின் வரிப்பணத்தில் தண்டச் சம்பளம் வாங்கும் இவர்கள் நம்பி, அவரை வெளியில் கூட்டிக் கொண்டு போவார்களாம். அந்தப் புள்ளிங்கோ இவர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு தப்பிப்பானாம். எப்புடி, ரெண்டு கைதிக்கு ஐந்து ஆயுதப்படை காவலர்கள் சென்றும் அவன் தப்பித்து விட்டான். இந்த ஐந்து தண்டச் சம்பளக் கேசுகளையும் நிரந்தரப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.


சமீபத்திய செய்தி