உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கர்ப்பிணியை தாக்கிய வாலிபர் கைது

கர்ப்பிணியை தாக்கிய வாலிபர் கைது

சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை, கோதமேடு பகுதியைச் சேர்ந்த 33 வயது கர்ப்பிணி, இரு தினங்களுக்கு முன், வீடு அருகே சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வீரா, 27, என்பவர் போதையில், அவரிடம் தகராறில் ஈடுபட்டு, தாக்கி தள்ளிவிட்டார். பெண்ணின் மாமியாரையும் தாக்கி, பிடிக்க முயன்ற பகுதி மக்களையும் கத்தரிகோலை காட்டி மிரட்டினார். புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார், வீராவை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை