உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புத்தாண்டில் பொங்கி வழிந்த மகிழ்ச்சி சுற்றுலா தலம், கோவில்களில் கூட்டம்

புத்தாண்டில் பொங்கி வழிந்த மகிழ்ச்சி சுற்றுலா தலம், கோவில்களில் கூட்டம்

ஆங்கில புத்தாண்டை ஒட்டி, கோவில்கள், சர்ச், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் நேற்று, பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.வடபழனி ஆண்டவர் கோவிலில் அதிகாலை காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.தங்க நாணய கவச அலங்காரத்திலும், தொடர்ந்து உச்சிகால பூஜைக்கு பின் தங்க கவச அலங்காரத்திலும், மாலை புஷ்ப அங்கி அலங்காரத்திலும் உற்சவர் அருள்பாலித்தார்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மயிலாபாபூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பக்தர்கள், அதிகாலை முதலே திரண்டு வந்தனர்.குன்றத்துார் முருகன் கோவில் நுழைவு பகுதியில், 108 கிலோ சந்தனத்தில் வடிவமைக்கப்பட்ட வள்ளி, தெய்வானை, முருகர் சிலை பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.பெரம்பூர் அய்யப்பன் கோவில், தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உட்பட பல கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.ஆங்கில புத்தாண்டை ஒட்டி, சென்னை சாந்தோம், ராயப்பேட்டை மற்றும் புதுப்பேட்டை உள்ளிட்ட சர்ச்சுளில், ஏராளமான பக்தர்கள் நள்ளிரவு முதலே ஒன்று கூடி ஜெபம் செய்தனர்.சுற்றுலா தலமான மாமல்லபுரம் கடற்கரை கோவில், முட்டுக்காடு படகு குழாமில், பலர் குடும்பம் குடும்பமாக வந்து, புத்தாண்டை கொண்டாடினர்.வண்டலுார் உயிரியல் பூங்காவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 15,690 பேர் வந்தனர். புத்தாண்டான நேற்று, 16,500 பேர் வந்தனர்.

10 வகை பழங்களால் மாலை

ராயபுரம், தம்பு செட்டி சாலை வர்ண விநாயகர் கோவிலில், பாதாம், முந்திரி, திராட்சை, செர்ரிழம், அத்தி, கிவி உள்ளிட்ட 10 வகையான பழங்களால் விநாயகருக்கு மாலை சாற்றப்பட்டது. ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, திராட்சை உள்ளிட்ட 20 வகையான பழங்களால் கோவில் வளாகம் அலங்காரம் செய்யப்பட்டது. இசைக்கருவி வாசிக்கும் விநாயகர், பசு மீது அமர்ந்திருக்கும் கிருஷ்ணர் போன்ற காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட சிலைகள், பக்தர்களை பெரிதும் கவர்ந்தன. -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை