பெயின்டருக்கு வெட்டு 3 பேருக்கு வலை
சென்னை, சூளைமேடு, நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் பரத்குமார், 20. பெயின்டர். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கரவாகனத்தில் வந்த மூவர், அவரது தலையில் கத்தியால் வெட்டினர். இதை பார்த்த அப்பகுதியினர் சத்தம்போட்டதால், தாக்குதலில் ஈடுபட்டோர், வாகனத்தை அங்கேயே விட்டு தப்பிச் சென்றனர். சம்பவம் அறிந்துவந்த சூளைமேடு போலீசார், மர்மநபர்கள் விட்டுச் சென்ற வாகனத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 20, அரும்பாக்கத்தைச் சேர்ந்த நெஸ்லே, 20, அமைந்தகரையைச்சேர்ந்த சரண், 20 ஆகிய மூவரும் பெயின்டரை வெட்டியது தெரியவந்தது.