உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொடிகள் படர்ந்து சாய்ந்த மின் கம்பத்தால் அபாயம்

கொடிகள் படர்ந்து சாய்ந்த மின் கம்பத்தால் அபாயம்

பெருங்குடி மண்டலம், 191வது வார்டுக்கு உட்பட்ட ஜல்லடியன்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில், ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த நிலையில், சாலையோரம் அமைந்துள்ள மின் கம்பத்தில் கொடிகள் செழித்து வளர்ந்து படர்ந்துள்ளன. அவற்றின் எடையைத் தாங்க முடியாமல், மின் கம்பம் ஒருபுறமாகச் சாய்ந்துள்ளது. இந்த வழியாக, தினமும் ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். மின் கம்பம் முறிந்து விழுந்தாலோ, மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலோ, பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும்முன், மின் கம்பத்தைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். – விஜய் சங்கர், ஜல்லடியன்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !