உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாழ்வான மின் கம்பிகளால் மேடவாக்கத்தில் விபத்து பீதி

தாழ்வான மின் கம்பிகளால் மேடவாக்கத்தில் விபத்து பீதி

தாழ்வான மின் கம்பிகளால் மேடவாக்கத்தில் விபத்து பீதி மேடவாக்கம், 3வது வார்டு, சாய்ராம் நகர் முதல் பிரதான சாலையில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஒரு மின்கம்பத்திலிருந்து மற்றொரு மின்கம்பத்திற்கு செல்லும் கம்பிகள் மிக தாழ்வான உயரத்தில், கைக்கு எட்டும்படி உள்ளன. தவிர, இரு மின்கம்பங்களும் சாய்ந்த நிலையில் உள்ளன.எதிரே உள்ள மரம் எப்போது வேண்டுமானாலும், மின்கம்பிகள் மீது விழலாம். இதனால், பகுதிவாசிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர். பேராபத்து நிகழும் முன், மின் வாரியத்தினர், மரக்கிளைகளை அகற்றி, மின் கம்பிகளை சரியான உயரத்தில் அமைக்க வேண்டும்.- ரதிதேவி, பள்ளிக்கரணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி