உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுரையில் 20ம் தேதி தனிஷ்க் வைர கண்காட்சி 

மதுரையில் 20ம் தேதி தனிஷ்க் வைர கண்காட்சி 

சென்னை, டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி சார்பில், மதுரையில் வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை, திருமண வைர நகைகள் கண்காட்சி நடக்க உள்ளது.தனிஷ்க் ஜுவல்லரி சார்பில், தற்போது 250க்கும் மேற்பட்ட நகரங்களில், 450க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை நிலையங்கள் உள்ளன.சமீபத்தில், திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை, வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள ஹோட்டல் ஆப்பிள்ட்ரியில், தனிஷ்க் ஜுவல்லரியின் பிரத்யேக திருமண வைர கண்காட்சி நடந்தது.இதில், உயர் மதிப்புமிக்க வைரங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் இடம் பெற்றிருந்தன. ஜுவல்லரி வணிக மேலாளர் ராம்கவுதம், அருண்ஜோஷ்வா, தனிஷ்க் பகுதி உரிமையாளர் ஹரிகிருஷ்ணன், பிராந்திய வணிகர் லோகேஷ் ஆகியோர் முன்னிலையில் கண்காட்சி நடந்தது.ஆபரணங்கள் ஒவ்வொன்றும், நுணுக்கமான கைவினைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதேபோன்ற கண்காட்சி, மதுரையில், வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்க உள்ளது. இக்கண்காட்சியில், ஒவ்வொருவரின் ரசனைக் கேற்ற வைர நகைகள் இடம் பெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை