மருமகள் கல்லீரல் தானம் மாமியாருக்கு மறுவாழ்வு
சென்னை, ஜமருமகள் அளித்த கல்லீரல் தானத்தால், மாமியாருக்கு அறுவை சிகிச்சை முடிந்து மறுவாழ்வு கிடைத்துள்ளது.இதுகுறித்து, ஜெம் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு:மியான்மரைச் சேர்ந்த, 66 வயது மூதாட்டிக்கு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாதிப்புகளால், கல்லீரல் சேதமடைந்து இறுதி கட்டத்தில், மருத்துவமனையில் சேர்ந்தார்.மருத்துவ குழுவினர் பரிசோதித்தப் போது, அவரது நிலைமை மோசமாக இருந்தது. இதையடுத்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மேக்னஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜ் தலைமையிலான குழுவினர், சிகிச்சை அளித்தனர். மூதாட்டியின், 32 வயதான மருமகள், கல்லீரல் தானம் அளித்தார்.தொடர்ந்து, 66 வயது மூதாட்டிக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மாமியார், மருமகள் ஆகியோர் நலமுடன் உள்ளனர். மூதாட்டி, அவருக்கு இருந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகிறார். இச்சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ குழுவினரை, மருத்துவமனை இயக்குனர் செந்தில் நாதன் பாராட்டினார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.