உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் மீது தாக்குதல் மகள், மருமகன் கைது

பெண் மீது தாக்குதல் மகள், மருமகன் கைது

வேளச்சேரி:வேளச்சேரி, நேரு நகரை சேர்ந்தவர் சாந்தி, 68. இவரது மகன் சதீஷ், 36. நேற்று முன்தினம், இருவரும் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.அப்போது, சாந்தியின் மகள் ஷாலினி, 35, மருமகன் வீரமணி, 38, மற்றும் சில உறவினர்கள் சேர்ந்து, சாந்தி, சதீஷ் ஆகியோரை, உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.வேளச்சேரி போலீசார் விசாரணையில், குடும்பத்தில் பண பிரச்னை இருந்ததும், அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் தாக்குதல் நடந்ததும் தெரிந்தது. இதையடுத்து, ஷாலினி, வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி