உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடன் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

கடன் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

வியாசர்பாடி: வியாசார்பாடியில் கடன் தொல்லையால், ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஆண்ட்ரோஸ், 25; ஆட்டோ ஓட்டுநர். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவருக்கு கடன் பிரச்னை இருந்து வந்த காரணத்தால், சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று (நவ.,17) இரவு 9:00 மணியளவில், வீட்டின் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன், எம்.கே.பி. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், ஆண்ட்ரோஸ் உடலை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை