மேலும் செய்திகள்
தாம்பரம் மாநகராட்சி 'யு - டியூப்' துவக்கம்
05-Apr-2025
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, 2 - 3 மண்டல குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையத்தின் செயற்குழு கூட்டம், குரோம்பேட்டையில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், மையத்தின் தலைவர், செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 2 - 3 மண்டலங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து தெருமுனை கூட்டங்களை நடத்தி, தீர்வு காண வேண்டும்.முக்கிய பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.துண்டு பிரசுரங்கள் வாயிலாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
05-Apr-2025