மேலும் செய்திகள்
வெட்டிய மரக்கிளைகளை அகற்றாததால் இடையூறு
17-Sep-2025
ஆபத்தான மரக்கிளைகள் அகற்றம்
04-Sep-2025
கட்சிகளின் நிதி விளையாட்டு!
20-Sep-2025
கிண்டி;ராஜ்பவன் கால்வாயில், கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்க, கால்வாயை ஒட்டி உள்ள வீடு, கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்க உள்ளது. அடையாறு மண்டலம், 172வது வார்டு, கிண்டி, கவர்னர் மாளிகை வளாகம் மற்றும் தேசிய பூங்காவில் சேரும் மழைநீர், வேளச்சேரி ஏரியை அடையும் வகையில், 10 அடி அகலம், 1.5 கி.மீ., நீளத்தில் ராஜ்பவன் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாயை ஒட்டி, வீடு, கடைகள் உள்ளன. மரக்கிளைகளும் கால்வாய் மேல் வளர்ந்துள்ளன. கழிவுநீர், மரக்கழிவுகள், குப்பை என, கால்வாயில் விழுந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. பருவமழையின் போது, நீரோட்டம் சீராக இருந்தால் தான், வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். இதற்காக, பாப்காட் வாகனம் பயன்படுத்தி, கால்வாயில் உள்ள சகதி, குப்பை வெளியேற்றப்படுகிறது. கால்வாயில் குப்பை கொட்டாமல் இருக்கவும், கழிவுநீர் விடுவதை தடுக்கவும், மரக்கிளைகளை வெட்டி விடவும், கால்வாயை ஒட்டி உள்ள வீடு, கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்வாயிலாக, கால்வாயை சீராக வைத்திருக்க முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
17-Sep-2025
04-Sep-2025
20-Sep-2025