வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மழை நீர் சேமிப்பு திட்டத்தை மிக தீவிரமாக அமல் படுத்த வேண்டும். மேட்டூரிலிந்து சென்னைக்கு குழாய் மூலம் காவேரி நீரை கொண்டு வரவேண்டும். நமக்கு டாஸ்மாக் தான் முக்கியம். நீர் வளத்துறை தூங்கிக்கொண்டிருக்கு . வாழ்க தமிழ் நாடு
சமீப காலமாக வருடமாக மேட்டூர் நீர் மட்டம் முழு கொள்அளவு அடைந்து உபரி நீர் கொள்ளிடத்தின் வழியாக வீண்அடிக்கபடுகிறது இதை. ஈராணம் ஏரிக்கு கொண்டு வந்து இன்னும் ஒரு. இரும்பு பைப் தற்போது உள்ளதின் பக்கத்திலேயே பதித்து அந்த அம்மா கொண்டுவந்த நல்ல திட்டம் நமக்கு தான் ஆகாதே. சென்னைக்கு நீர் கொண்டுவந்தால் பல நோக்கு திட்டமாக. இருக்கும் ஆணால் பல வருடங்களாக. உபரி. நீர் வீண்டிக்கபடுவது மட்டுமே நடக்கிறது
1992 அரையாண்டு விடுமுறை என்று நினைக்கிறேன், என்னுடைய நண்பரின் தாத்தா ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவமனையில் இன்றைய செட்டிநாடு மருத்துவமனையில் உடல் நல குறைவால் அனுமதிக்கப் பட்டிருந்தார், அவரை காண நானும் என் நண்பனும் ஆதம்பாக்கத்தில் இருந்து மிதி வண்டியில் வாரம் இரு முறை கேளம்பாக்கம் செல்வோம். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது அப்போதெல்லாம் மடிப்பாக்கத்தை தாண்டியவுடன் வீடுகளை அவ்வளவாக பார்க்க முடியாது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும், எங்கு பார்த்தாலும் நீர் நிலைகளும், ஆங்காங்கே கொஞ்சம் வயல்கள் மட்டும் தான் தெரியும், மதியம் 12 மணி அளவிலும் அந்த சாலைகளில் குளிர்ந்த காற்று முகத்தில் அடிக்கும். போகிற வழிகளில் எல்லாம் நீர்வாழ் பறவைகளை நிறைய காணலாம் குறிப்பாக மீன்கொத்திகள், பலவிதமான கொக்குகள் & நாரைகள், பலவகையான உள்ளான்கள், ஆலா, நீர்காகம், பாம்புத்தாரா, கூழைக்கடா, அரிவாள் மூக்கன், கரண்டி மூக்கன், இன்னும் வேறு சில பறவைகளை நிறைய காணலாம் அப்போதெல்லாம் அந்த பறவைகளின் பெயர் தெரியாது. அன்று நான் மிதிவண்டியில் பயணித்த பாதைகள் அனைத்தும் concrete காடுகளாக மாறிவிட்டன, இயற்கையும் அழிந்து விட்டது.