உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதிதாக மகளிர் காவல் நிலையம் படப்பையில் அமைக்க வலியுறுத்தல்

புதிதாக மகளிர் காவல் நிலையம் படப்பையில் அமைக்க வலியுறுத்தல்

படப்பை:தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட மணிமங்கலம் காவல் சகரகத்தில், மணிமங்கலம், சோமங்கலம் ஆகிய இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. புதிதாக படப்பையில் காவல் நிலையம் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில், மணிமங்கலம், சோமங்கலம், புதிதாக துவங்கப்பட உள்ள படப்பை ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைகளை இணைத்து, படப்பையில் புதிய மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மணிமங்கலம், சோமங்கலம் காவல் நிலைய எல்லையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு புகார் அளிக்க, 18 கி.மீ., துாரத்தில் உள்ள கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அதனால், மணிமங்கலம், சோமங்கலம், படப்பை காவல் நிலைய எல்லைகளை இணைத்து, படப்பையில் புதிய மகளிர் காவல் நிலையம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ