உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

பிராட்வே,உலக ஆண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தேசிய மகளிர் ஆணையம் உள்ளது போல், தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்கக்கோரி, இந்திய ஆண்கள் முன்னணி அமைப்பினர், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அமைப்பின் தலைவர் ராமதாசன் கூறியதாவது:தேசிய மகளிர் ஆணையம் உள்ளது போல, ஆண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும். ஆண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கும் பெண்கள் மீது புகார் கொடுத்தால், அவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை பதிவு செய்ய வேண்டும்.திருமணம் கடந்த பாலியல் உறவுகளை, சட்டத்தின் வாயிலாக அனுமதிக்க கூடாது. பெண்களை பாதுகாப்பற்காக ஏற்றப்பட்ட சட்டங்கள், ஆண்களுக்கு எதிராக மட்டுமல்லாது; குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு எதிராகவும் பயன்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.ஆண்கள் தற்கொலை குறித்து, ஆய்வு நடத்த சட்ட ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். பெண்களுக்கு ஒரு சட்டம், ஆண்களுக்கு ஒரு சட்டம் என, இரண்டாம் தர குடிமக்களாக ஆண்களை நடத்துவதை, மத்திய, மாநில அரசும் பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை