புகைப்பட கண்காட்சி துணை முதல்வர் திறப்பு
கொளத்துார் :கொளத்துாரில் உள்ள ஜி.கே.எம்., விளையாட்டு மைதானத்தில், 'நாடுபோற்றும் நான்காண்டு' என்ற பெயரிலான தி.மு.க.,வின் நான்காண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நேற்று துவங்கியது.புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி, '3டி' தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சாதனை விளக்க குறும்படத்தையும் பார்த்தார்.இந்நிகழ்ச்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, தி.மு.க., - எம்.எல்.ஏ., 'தயாகம்' கவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.