மேலும் செய்திகள்
வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பு தரிசனம் ரத்து
04-Jan-2025
சென்னை,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு, வைகுண்ட ஏகாதசி விழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும்.இந்த ஆண்டிற்கான பரமபத வாசல் திறப்பு, வரும் 10ம் தேதி, அதிகாலை 4:30 மணிக்கு நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும், 2,000 பேர் வரை அனுமதிக்கப்படுவதாகவும், அறநிலையத் துறை தெரிவித்திருந்தது.மேலும், பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியை காண, 'ஆன்லைன்' வாயிலாக, முதலில் பதிவு செய்த 500 பேருக்கு, முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.இந்நிலையில், 1,500 பேருக்கு, 500 ரூபாய்க்கான கட்டண அனுமதி சீட்டு, நேற்று கோவிலில் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசன டிக்கெட்டுகளை பெற்று சென்றனர்.
04-Jan-2025