உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இரவு நேர பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டு உள்ள டிஜிபி சங்கர் ஜிவால், தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை தலைவர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தினார். காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் என்ற இளைஞரை கைது செய்தனர். இதனையடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனைகளின் பாதுகாப்பு தொடர்பாக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: *அனைத்து மருத்துவமனைகளிலும் இரவு நேர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.*மருத்துவமனைகளில் தாக்குதல் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.*கூடுதல் ரோந்து போலீசாரை நியமித்து அனைத்து மருத்துவமனைகளையும் கண்காணிக்க வேண்டும்.*பாதுகாப்பு தொடர்பாக போலீசாருடன் மருத்துவமனை டீன்கள் தொடர்பில் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் டிஜிபி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kasimani Baskaran
நவ 15, 2024 05:37

வேலை செய்யவே தனிப்பட்ட ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்றால் இதற்க்கு முன்னர் வேலை செய்ய வேண்டாம் என்று ஒருவேளை வாய்வழி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்களோ...


T.sthivinayagam
நவ 14, 2024 20:34

தமிழக பாஜாகாவினர் அவசியம் உபி பீகார் மாநில அரசு மருத்துவமனை ஒரு முறை பார்க்க வேண்டும் .


hari
நவ 15, 2024 11:06

அகர்தலா மருத்துவமனை எப்படி சிவ்ணயகம்??? என்று மக்கள் கேட்கிறார்கள்


Sundar R
நவ 14, 2024 19:27

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்


Palanisamy Sekar
நவ 14, 2024 19:12

இதை என் முன்பே செய்யாமல் தேமேன்னு இருந்தீங்க?ஒவ்வொரு சம்பவங்களுக்கு பின்னர் தான் யோசிப்பீங்களோ? என்ன செய்ய பெரிய குடும்பத்துக்கே உழைக்க நேரம் போதல. சிபாரிசுகளை வைத்தே கைது செய்யவேண்டிய குழந்தை தொப்புள் கொடியை அறுத்த சம்பவத்தை வசதியாக மறந்துவிட்டீர்களா. இதுக்குதான் உங்களுக்கு பதவியும் பவுசும். போங்கசார் உத்யோகத்துக்கு துரோகம் செய்யாதீர்கள்


அப்பாவி
நவ 14, 2024 19:12

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தரம் உயர்த்த ஒரு புண்ணாக்கு உத்தரவும் கிடையாது. டாக்டர்கள் நோயாளிகளை கேவலமா திட்டி அனுப்புனா ஒரு ரியாக்‌ஷனும் இருக்கக்கூடாது.


Ramesh Sargam
நவ 14, 2024 18:17

கூடவே ஒருசில போலீஸ் நிலையங்களில் கூட பாதுகாப்பு வேண்டும் பொதுமக்களுக்கு. புகார் அளிக்க சென்றால், தெருநாயைவிட கேவலமாக நடத்துகின்றனர் புகார் அளிக்கவரும் பொதுமக்களை


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
நவ 14, 2024 18:00

ஆமா இப்படி ஒவ்வொரு சம்பவம் நடக்கும் போதும் இதையே சொல்லுங்கள். இப்போது ஆஸ்பத்திரி நடந்தது போல அடுத்து எங்காவது அரசு அலுவலகங்களில் இது போல சம்பவம் நடந்தால் உடனே தமிழத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது என்று அப்போதும் இதே டயலாக்கைதான் பேசுவீர்கள் என்ன செய்வது தமிழக மக்களுக்கும் இப்படி அடிக்கடி நடக்கும் சம்பவங்களை பார்த்து பார்த்து கேட்டு கடைசியில் என்னமும் பண்ணிட்டு போங்கடா உங்களுக்கு ஓட்டு போட்ட பாவத்துக்கு இதை எல்லாம் நாங்க அனுபவிச்சுதான் ஆகணும் என்கிற மறத்துப் போகின்ற மனநிலைக்கு கொண்டு வந்து விட்டதுதான் இந்த திராவிடமாடல் விடியாத அரசின் லட்சணம்.


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 19:59

பெற்ற தாய் சுகமில்லாமல் இருக்கும் போது கத்தி வெச்சுக்கிட்டு சுத்தறவன் தவறானவனா அரசாங்கம் தவறானதா?


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 20:05

ஆங்காங்கே இப்படி, பெற்ற அன்னை சுகமில்லாமல் கிடக்கும் போது கூட கத்தியுடன் சுற்றும் தருதலைகள் இருப்பதற்கும் அரசாங்கத்துக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கெடுத்தாலும் திராவிட மாடல், விடியல் னு இங்கே எழுதிவிட்டால், அப்படியே தமிழ் நாட்டு மக்கள் திமுக விற்கு எதிராக மாறிவிடுவார்களா?


முக்கிய வீடியோ