உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.டி.சி.,யில் இலகு பணிக்கு இயலாமை சான்று கட்டாயம்

எம்.டி.சி.,யில் இலகு பணிக்கு இயலாமை சான்று கட்டாயம்

சென்னை, மாநகர போக்குவரத்து கழகத்தில் 20,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட கனரக பணிகளை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு, நேரக் காப்பாளர், தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்டவற்றில் இலகுப் பணிகள் வழங்கப்படுகின்றன.இதில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக, மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:மாநகர போக்குவரத்து கழகத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டு இலகுப்பணி கோரும் பணியாளர்களை, நிர்வாக துணை குழுவின் முன் நேரில் ஆஜர்படுத்தி சிகிச்சை பெற்று வரும் மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் பணியாளரின் உடல் நிலைக்கேற்ப துணை குழு பரிந்துரையின்படி தற்காலிகமாக மாற்றுப் பணி வழங்கப்படுகிறது.தற்போது, போக்குவரத்துத் துறை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இயலாமைக்கான சான்றிதழை தகுதி வாய்ந்த அதிகார அமைப்பிடமிருந்து பெற்று சமர்ப்பிக்கும் பணியாளர்களுக்கு மட்டும் மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின்படி, மாற்றுப் பணி வழங்கப்படும். மேலும், மற்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுப் பணி கோரும்போது சூழ்நிலைக்கேற்ப வழங்க பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை