உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வாரிய வீடு ஒதுக்கீட்டில் குளறுபடி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

 வாரிய வீடு ஒதுக்கீட்டில் குளறுபடி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருவொற்றியூர்: நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியால், பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அம்பேத்கர் சிலைக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். திருவொற்றியூர் - திருச்சிணாங்குப்பம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், சில மாதங்களுக்கு முன், பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதில், வீடு ஒதுக்கீடு பெற்ற கல்பனா, குமரேசன், மேகத்தான், பழனி, விஜி உள்ளிட்ட ஆறு பேரும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொடர் சிகிச்சையில் இருக்கும் நபர்கள். இவர்களுக்கு, முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் சார்பில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டு, ஆறு பேரும் தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு ஆணை பெற்றனர். இதற்கிடையில், குலுக்கல் முறையில், தரைத்தளத்தில் வீடு கிடைக்கப் பெற்றவர்கள், அந்த வீட்டில் வசிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அதிகாரிகளின் இந்த குளறுபடியால், மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் குடியேற முடியாத சூழல் உள்ளது. இதற்கு தீர்வு காண வேண் டும் என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி, காவல்துறையிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள், நேற்று காலை திருவொற்றியூர் - சுங்கசாவடி சந்திப்பில் உள்ள, அம்பேத்கர் சிலைக்கு மனு கொடுக்கும் போ ராட்டம் நடத்தினர் . பின், திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவர்களை சமாதானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ