மாற்றுத்திறனாளர் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி
சென்னை, உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில், மாற்று திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்து சட்ட மசோதாவை அறிமுகம் செய்து வைத்துள்ள தமிழக முதல்வருக்கு, மாற்று திறனாளர் சங்கத்தினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.இது குறத்து, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் சங்க மாநில பொதுச் செயலர் கோபிநாத் கூறுகையில், ''மாற்று திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும் வகையிலும், மேலும் ஒரு மணிமகுடம் சூட்டப்படுவது போல், தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் தேர்வு செய்யப்படுவதற்கான சட்ட முன்வடிவை, சட்டசபையில் அறிமுகம் செய்ததற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.