நிழற்குடை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால் அதிருப்தி
தே னாம்பேட்டை மண்டலம், கோபாலபுரத்தில் கான்ரான் ஸ்மித் சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள கோபாலபுரம் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் துவங்கின. ஒப்பந்ததாரர், நிழற்குடை அமைப்பதற்கான துாண்கள் மட்டும் அமைத்துவிட்டு, அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ளாமல் விட்டுள்ளார். இதனால் பயணியர், பேருந்து வரும் வரை, வெயிலிலும், மழையிலும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரைகுறையாக விடப்பட்ட நிழற்குடை அமைக்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - சரஸ்வதி, கோபாலபுரம்.